Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரேஷன் அரிசி கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 3 பேருக்கு நீதிபதி சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 25.4.2014 தேதியன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்திரன் என்பவர் 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சந்திரன் தொட்டியங்குளம் ரயில்வே பாலத்தின் கீழ் 9 மூடைகளில் 450 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன்பிறகு காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரனை கைது செய்து விசாரணை செய்தபோது ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகியோரிடமிருந்து அரிசி  வாங்கியது தெரியவந்தது. அதன் பிறகு சந்திரன், ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பானது சந்திரனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் பணம் அபராதமும், ரேஷன் கடை விற்பனையாளரான ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய இருவருக்கும் தலா 3 வருட ஜெயில் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் பணம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |