நீல நிறத்தோலுடன் சுவிஸ் மாகாணம் ஒன்றில் வலம் வந்த நபர் ஒருவர் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் நீல நிறத்தோல் கொண்ட நபர் ஒருவர் தென்பட்டுள்ளார். ஆனால் வெள்ளி துகள்களால் அந்த நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில நாடுகளில் புண்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு “நைட்ரேட்” ரசாயனம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மருந்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீல நிறத்தோல் கொண்ட அந்த நபர் வைரஸ்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நைட்ரேட் ரசாயனத்தை மருந்தாக எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் எதிர்பாராதவிதமாக அவருடைய தோல் முழுமையாக நீல நிறமாக மாறியுள்ளது.
இந்நிலையில் மருத்துவர்களிடம் சென்று ஆலோசித்த போது அவர்கள் நீல நிறத்தோல் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அந்த நபருடைய உடலில் உள்ளுறுப்புகள் சில பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மருத்துவர்கள், வெள்ளிப்பொடியை மக்கள் எந்த காரணம் கொண்டும் மருந்தாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.