பெண்ணிடம் 4 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற மகனும், மருமகளும் இருக்கின்றனர்.
கடந்த நவம்பர் 10 – ஆம் தேதியன்று மர்ம நபர்கள் பாண்டியின் வீட்டிற்குள் புகுந்து சுப்புத்தாய் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.