சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
சிம்பு, கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தில் 3-வது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்சன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கி தற்போது மும்பையில் நிறைவடைய உள்ளது.
இதற்காக சிம்பு, கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழு சமீபத்தில் மும்பை சென்று உள்ளது. அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கான படப்பிடிப்பு தள இடங்களை இயக்குனர் கௌதம் மேனன் பட குழுவினருடன் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.