Categories
மாநில செய்திகள்

‘ஃபாத்திமா தற்கொலையில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது’ – மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி..!!

மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடியில் படித்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த எட்டாம் தேதி விடுதி அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முதலில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தான் மாணவி தற்கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தாலும், பின் அவரின் அலைபேசி குறிப்புகள் மூலம் பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என்று தெரிய வந்தது. தற்போது, தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் தற்கொலை குறித்துப் பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Image result for Fatima Latif kanimozhi

இந்நிலையில், மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வழக்கு விசாரணை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘ சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக இதுவரை யாருடைய பெயரும் ஏன் இடம்பெறவில்லை?. விசாரணைக்காக ஏன் ஒரு பேராசிரியர் கூட இதுவரை அழைக்கப்படவில்லை?. ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது?’ என்று பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

Categories

Tech |