Categories
உலக செய்திகள்

இதுதான் சீனாவின் கருத்து..! இரு நாட்டு தலைவர்களின் முக்கிய பேச்சுவார்த்தை… வெளியான பரபரப்பு தகவல்..!!

நவம்பர் 15-ஆம் தேதியன்று சீன பிரதமர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளி மூலம் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக ரீதியிலான பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்த கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் மனித உரிமை விவகாரங்கள், ராணுவ நடவடிக்கைகள், இருதரப்பு வர்த்தக சிக்கல்கள் தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவின் அணு ஆயுத குவிப்பு தொடர்பில் கவலை தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சீனா இந்த பேச்சுவார்த்தையின் போது கொரோனா பேரிடர், காலநிலை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் இருநாடுகளும் கோல்ப் விளையாட்டை போல செயல்பாடுகளை சிறப்பாக வெளிப்படுத்தவே விரும்புகிறது. ஆனால் ஒருவரை ஒருவர் குத்து சண்டையை போல் நாக் அவுட் செய்ய விரும்பவில்லை என்று சீனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸை காண்பதற்காக இந்த பேச்சுவார்த்தையின் போது அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |