Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (19.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள்  தோல்வி அடைந்தது என்று மனம் கலங்காதீர்கள். இனிவரும் காலங்கள் உங்களுக்கு வெற்றியே ஏற்படும். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி. இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும்.

வேகம் பிறக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். போட்டிகள் மறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். லாபம் பன்மடங்கு பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் மனைவி குழந்தைகளின் உடல் நிலையில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

சந்தேகம் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். முருகப் பெருமான் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பு வாய்ந்த வழிபாடாக அமையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத இடங்களில் இருந்தும் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். பொருளாதாரம் உயரும். தொழில் சிறப்பாக நடக்கும். பெரியோர்கள் நண்பர்களின் சந்திப்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரத்திற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பை கொடுக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பாடங்களை மட்டும் கொஞ்சம் கவனமாக படியுங்கள். பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறமானது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாச பயணங்களால் சந்தோஷம் நிலவும். இன்று மன அமைதியும் ஏற்படும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நல்லபடியாக நடந்து முடியும். விரும்பிய பொருட்களை வாங்க கூடும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மன பலம் இருக்கும்.

மனதில் தைரியம் பிறக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டுமே என்ற கவலை கொஞ்சம் குறையும். சக மாணவரின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். ஆசிரியரின் சொல்படி மட்டும் கொஞ்சம் நடந்து கொள்ளுங்கள்.

கூடுமானவரை பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுக்கான அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். கல்வியில் நல்ல சிறப்பு அடையக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொந்த வீடு நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்துமே தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

வேலைப்பளு கொஞ்சம் குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு திருப்தியை கொடுக்கும். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். வானத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கக் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும். ஆனால் மனதில் மட்டும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும்.

உறவினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டமும் அதிகரிக்கும். இன்றைக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். இன்று தனவரவுக்காக கொஞ்சம் காலதாமதம் தான் பிடிக்கும். அதற்கு ஏற்றார் போல் இன்று திட்டங்களை தீட்டி செயல்படுங்கள். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச அனுபவங்கள் கூடும் நாளாக இருக்கும். குழந்தைகளின் திறமையை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தியை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும்.

இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். நினைத்தபடி பணவரவையும் பெறக்கூடும். இன்று உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுக்கு அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கிய நிலை மேம்படும் நாளாக இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு பேச்சே மூலதனமாய் அமையும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். சிலர் காதலில் வயப்படகூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.

எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மேல் இடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்களும் கோபப்படக்கூடாது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று நடக்கக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்றைய செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு ஏற்படும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் மிகுந்த பிரயாசத்திற்குப் பிறகே நடக்கும். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று சிறு விஷயத்திற்கு கூட கோபம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள். திடீர் பணத் தேவை கொஞ்சம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணியை செய்யும்படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறலாம். இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகும். இன்று வாகன பழுது கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

வெளியூர் பயணம் சிறுசிறு தொல்லைகள் கொடுக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ள இருக்கும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் ன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! தாய் சொல்லை தட்ட மாட்டீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பணிவு தன்மை இல்லை எனில் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். அவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

வெளியூர் பயணத்தின் போது உடமைகள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று தடைகளைத் தாண்டியும் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியம் கூடும் நாளாக இருக்கும். மனதில் தெம்பும் தெளிவும் நிறைந்திருக்கும். பொதுநல வாழ்க்கையில் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

அவர்களது போக்கில் விட்டுப் பிடியுங்கள். மனதில் இருந்த வீண் கவலை விலகிச்செல்லும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். எதிரிகளும் இன்று விலகிச் செல்வார்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கவனமுடன் பாடங்களை படிக்க வேண்டும்.

படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பு. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இட மாற்றங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.. பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் பணமுடை ஏற்படலாம். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மையை கொடுக்கும். வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துதான் தான் செல்ல வேண்டும்.

மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய மனநிலை இருக்கும். காரிய தடைகள் விலகி செல்லும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். இன்று உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவுக்கு நிம்மதியாகவே காணப்படும். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும்.

பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் நிதானம் வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் மிக சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. கூடுமானவரை பொறுமையாக செயல்படுங்கள். மனைவி மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் எதிர்பாராத வகையில் பகை ஏற்படும். இன்று எல்லா பிரச்சனைகளும் ஓரளவு சரியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும். சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும்.

சில நேரத்தில் இடம் பொருள் தெரியாமல் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையை  சார்ந்தவர்களுக்கு ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்க்கு ஏற்றவாறு கூடுதல் வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். இன்று மனம் மகிழ்வாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

உங்களுடைய மனமும் அமைதியாக இருக்கும். அதுபோலவே வாகன பழுது கொஞ்சம் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |