Categories
உலக செய்திகள்

ஆபத்து காத்திருக்கு..! உடனே அந்த நாட்டை விட்டு வெளியேறுங்க… தனது குடிமக்களுக்கு கனடா உத்தரவு..!!

கனடா ஹெய்தி நாட்டில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கர எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஹெய்தியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கனடா, ஹெய்தியில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து தனது அத்தியாவசிய மற்ற அலுவலர்கள் அனைவரையும் வெளியேற்றி வருவதோடு, கனேடிய சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கனேடிய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது தூதரக அலுவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கனேடிய பணியாளர்களை ஹெய்தியிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஹெய்தியில் வசிக்கும் கனேடியர்களுக்கு ஹெய்தி நாட்டின் port-au-prince நகரில் அமைந்துள்ள கனேடிய தூதரகம் உதவி செய்து வருவதாக கனடா கூறுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஹெய்தி நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டில் வசிக்கும் கனேடியர்கள் கடத்தப்படும் அபாயமும் உள்ளது என்று கனடா தெரிவித்துள்ளது. எனவே ஹெய்தியில் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வசித்திருப்பவர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கனடா அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |