Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் கல்வி வட்டத்தில் உள்ள கடலோர பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |