Categories
மாநில செய்திகள்

புதிய புயல் சின்னம்…. 19 மாவட்டங்களில் இன்று அதிக கனமழை…. அலர்ட்… அலர்ட்….!!!!

வங்க கடலில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை இதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றுஇதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை, சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Categories

Tech |