குஜராத் மாநிலத்தில் ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சி தொடர்பான உணவுகளை வெளியில் தெரியும் படி வைக்க கூடாது என்று வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அனைத்து உணவு கடைகளும் குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்பனை செய்பவர்கள் சுகாதார காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்ட இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அசைவ உணவுகளை முழுமையாக காட்சிக்கு வைத்து விற்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதை சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அசைவ உணவை பார்க்கக் கூடாது. இந்த அறிவுறுத்தல் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்கும் கடைகளுக்கு பொருந்தும். அதாவது பொதுவெளியில் இறைச்சி உணவுகளை பார்ப்பதால் மத உணர்வுகள் புன்படுவதாக நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனை மீறினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.