Categories
தேசிய செய்திகள்

கண்ணூர் விரைவு ரயில் தடம் புரண்டது….. ரயில்வே காவல்துறை விசாரணை…..!!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி வழியாக கர்நாடக மாநில வரை கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் மாலை 6 மணி கண்ணூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு சென்றடையும். இந்நிலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முத்தம்பட்டி வனப்பகுதியில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்த உள்ளது. இந்த கற்கள் ரயில் இன்ஜினில் உரசியதால் இன்ஜின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

இதனால் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பிறகு 4 மணி நேரமாக பயணிகளுடன் ரயில் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு சேலத்தில் இருந்து வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு பெட்டிகள் அனுப்பப்பட்டு உள்ளது. அதன் பிறகு தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் பேருந்து மூலம் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சேலம்-பெங்களூர் வழியில் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர் மழையின் காரணமாக இந்த கற்கள் சரிந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் சதி செயல் உள்ளதா என்று ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |