பெண் அதிகாரிகளை நிரந்தர ஆணையத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் 11 பேருக்கு ராணுவ நிரந்தர ஆணையத்தில் இணைக்கப்படாமல் நிராக்கரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் கூட நிராக்கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவர்களை வருகின்ற நவம்பர் 27 ம் தேதிக்குள் ஆணையத்தில சேர்தல்துவிட வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த 11 பெண்களையும் நிரந்தர ஆணையத்தில் சேர்த்திட இந்திய ராணுவம் நேற்று சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தில் சேர்க்கப்படுவதால் பெண் அதிகாரிகள் உயர் பதவிக்கு செல்லலாம். இதன்படி அவர்களுக்கு சிறப்பு மற்றும் ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஜூனியர் பெண் அதிகாரிகளுக்கும் அந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் அந்த ஆணையத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக பணியாற்றி அனுபவம் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இது போன்று நிரந்தர ஆணையம் பெண் அதிகாரிகளுக்காக அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.