Categories
மாநில செய்திகள்

திருச்சி, மதுரை மக்களே ஹேப்பி நியூஸ்….. “ஸ்ரீரடி யாத்ரா”-க்கு ரெடியா இருக்கீங்களா?…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில் பயணிகளுக்காக ஆன்லைனில் பல்வேறு வசதிகளை இந்தியன் ரைல்வே கேடரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உள்நாட்டு சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் பாரத் தர்ஷன், ரயில் டூர் பேக்கேஜ், எல் டி சி பேக்கேஜ்கள், சார்டர் கோச், ரயில் பேக்கேஜ்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி சுற்றுலா என சிறப்பு பயண பேக்கேஜ்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தென்னிந்தியாவில் பிரீமியம் பாரத் தர்ஷன் என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில் ஸ்ரீரடி யாத்ரா என்ற பெயரில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், விருதாச்சலம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் வரை செல்லும் சிறப்பு ரயில் குறித்து ஐஆர்சிடிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் பந்தர்பூர், ஸ்ரீரடி, ஷானி ஷிங்னாப்பூர் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றது. இதற்காக 7060 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கும் சுற்றுலா வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி வரை மந்த்ராலயத்தில் முடிவுக்கு வருகிறது. இந்த பயணத்திற்கான விடுப்பு பயண சலுகை அரசு ஊழியர்கள் பெறலாம். இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க இ-டிக்கெட் ஏஜென்டுகளை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தை அணுகலாம். மேலும் www.irctctourism.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Categories

Tech |