Categories
மாநில செய்திகள்

ALERT: இன்னும் 12 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் தமிழகத்தில் இன்று முதல் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |