கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் 25,31,82,737 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே 22,89,71,028 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம் 51 லட்சத்து 03 ஆயிரத்து 629 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 1,91,08,080 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 76 ஆயிரத்து 987 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.