Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களே உடனே கிளம்புங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வருகின்ற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், இதுவரை பெயரை சேர்க்க அவர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் (பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்) மேற் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு கீழ் இருந்தால் வயது சான்று அளிக்க வேண்டும். வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல், பள்ளி நிறைவுச் சான்றிதழ் நகல் ஆகியன சமர்ப்பிக்கலாம்.

பெயர் சேர்க்க – படிவம் 6, பெயர் நீக்க -படிவம் 7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்-படிவம் 8 பாகம், பார்டு மாற்ற-படிவம் 8 ஏ படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் (பள்ளிகளில்) வாக்காளர் சிறப்பு முகாம் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பதாரர்கள் வசிப்பிட முகவரி, சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை,சமீபத்திய மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.

Categories

Tech |