கடந்த 10 தினங்களுக்கு மேல் ஆகியும் கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார்நகர் 3-வது குறுக்குத் தெருவில் குப்பைகளானது கொட்டப்பட்டு கிடக்கிறது. கடந்த 10 தினங்களுக்கு மேல் ஆகியும் இந்த குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.