காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலசுந்தரம் சாலையில் இருக்கும் காவலர் குடியிருப்பில் போலீசாரான ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் அதே குடியிருப்பில் வசிக்கும் ரமேஷ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.