Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இனி….. ரயில்வே அமைச்சகம் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கமான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.20 மாதங்கள் கடந்த நிலையில் சிறப்பு ரயில்கள் என்ற அடையாளம் நீக்கப்பட்டு கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி வழக்கமான ரயில் தடங்களில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அதனால் சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை உடனடியாக அமல் படுத்தும் படி மண்டல ரயில் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அது நடைமுறைப்படுத்த ஓரிரு நாள் ஆகலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.அதனால் சிறப்பு ரயில்கள் மற்றும் விடுமுறை கால ரயில்கள் என்ற அடையாளம் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட ரயில்களில் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட சாதாரண கட்டணத்தில் முன்பதிவு இல்லாத பேஸஞ்சர் பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் பழனி மற்றும் மதுரை, கோவை பொள்ளாச்சி, தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |