தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக நாளை காலை 9 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து புறப்பட இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் இன்று மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட இருந்த கோட்டையம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் நாகர்கோயில் -திருவனந்தபுரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.