Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கனகமுட்லு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளை அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முனிராஜின் மனைவியான ராணி என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் ராணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |