ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நாகபட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நடுரோட்டில் திரும்பியுள்ளது. அப்போது பேருந்தின் ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவர் ஆட்டோவின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கமாகத் திருப்பியுள்ளார்.
இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விட்டது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.