Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்தார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் மாதேஷ் டீ குடிப்பதற்காக பாலக்கோடு பாப்பரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் நடந்து சென்ற மாதேஷ் பின்னால் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த மாதேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |