Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு…. நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்…. அதிகாரிகள் செய்த செயல்….!!

மழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் நீரில் மூழ்கியது.

இதுகுறித்து தகவலறிந்த மாரிமுத்து எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் ராம்குமார், பிச்சன் கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மகாலிங்கம், துணை தலைவர் மகேஸ்வரி முருகானந்தம், பாசனதாரர்கள் சங்க தலைவர் கோவி சேகர் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த வளவனாறு வாய்க்காலை பார்வையிட்டனர். இதனையடுத்து வாய்க்கால் உடைந்த பகுதியில் 700 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டது. இவ்வாறு உடனடியாக வாய்க்கால் சீரமைக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மகாலிங்கம் தெரிவித்தார்.

Categories

Tech |