Categories
அரசியல் மாநில செய்திகள்

சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி, கமல் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார்.

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 821 பயனாளிகளுக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ‘மயிலாடுதுறையை அடுத்த பட்ஜெட்டில் கூட்டத் தொடரில் தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து மாபெரும் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்து, தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்கள். சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி,கமலை விமர்சித்தார்.

Categories

Tech |