மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 7 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. அதனால் சீர்குலைந்த போன ராணுவ வாகனத்தில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர். அந்த கண்ணிவெடி தாக்குதலில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Categories