தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சீர்காழி தாலுக்கா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர்,கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை 15 வகையான மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார். இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் வீடு கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஹேக்டர் நிலப்பரப்பில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் ஹெக்டரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் 97 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஏழு வீடுகள் முழுமையாகவும் 746 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாக சேதமடைந்துள்ளது.பல்வேறு பகுதிகளில் பயிர்கள் அழுகி விட்டதாக விவசாயிகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இவற்றைக் கேட்ட பிறகு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறிய முதல்வர்,நாகை மாவட்டம் கருங்கண்ணி அருந்தவம்புலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்