Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” போலீஸ் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி வந்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆத்துமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி மது விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் மாரண்டஅள்ளி காவல்துறையினர் ஆத்துமேடு கிராமம் அகரம் சாலையில் உள்ள போயர் கொட்டாய் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் போலியான மதுபானம் தொழிற்சாலையை நடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

மேலும் அங்கு சாராயம் தயாரித்து அதற்கு கலர் கலந்து அதனை மதுபாட்டிலில் நிரப்பி போலி தொழிற்சாலையின் ஸ்டிக்கர்கள் ஒட்டி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த சுந்தரராஜன், இவரது மனைவி முத்துமணி மற்றும்  இவர்களின் வளர்ப்பு மகன் ஷேக் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அதுமட்டுமின்றி போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள், சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்கள், மது பாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் லிட்டர் சாராயம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |