ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,
பில்லா: கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980ல் வெளியான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார்.
ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜானி’. இந்த படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
அதிசய பிறவி: எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது. கனகா, நாகேஷ், சோ ராமசாமி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
அருணாச்சலம்: 1997 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த படத்தில் சௌந்தர்யா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருப்பார்.
எந்திரன்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் ரஜினி வசீகரன் கதாபாத்திரம் மற்றும் ரோபோவாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்