Categories
உலக செய்திகள்

“கால்நடைகளுக்கு பரவிய தொற்று!”.. 219 பசுக்கள் கொல்லப்படும் நிலை..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு மாட்டுப் பண்ணையில் கால்நடை நோய் கண்டறியப்பட்டதால் சுமார் 219 பசுக்கள் கொல்லப்படவிருக்கிறது.

பிரான்சில் ஒரு மாட்டு பண்ணையில், ஒரு பசுவிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, நாட்டின் வேளாண்மை துறை அமைச்சகமானது, உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோயானது கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் தாக்கக்கூடிய தொற்றுநோய்.

இந்நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியாவிலிருந்து உருவாகிறது. நாய்கள், பன்றிகள், ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை இந்த பாக்டீரியா தாக்கும். இந்த நோய் பாதித்த கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கும் இந்த பாக்டீரியா பரவும். இது மட்டுமல்லாமல் இந்த நோய்த் தொற்று உள்ள கால்நடையின் இறைச்சியை தொடுவதாலும், கிருமி அகற்றப்படாத பால் பொருட்களை உண்பதாலும் இத்தொற்று மனிதர்களுக்கு ஏற்படும்.

எனவே, இந்த நோய்த்தொற்று பரவாமல் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்ட பசு இருக்கும் பண்ணையில் உள்ள சுமார் 219 பசுக்களை கொல்வதற்கு வேளாண்மை அமைச்சகம் தீர்மானித்தது. மேலும், இதற்காக தங்கள் பசுக்களை கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Categories

Tech |