கர்நாடகாவில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி அதனை எடுக்க போலி சாமியாரால் நிர்வாண பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீனிவாஸ் என்பவர் வசித்து வரும் வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் புதையல் மறைந்து இருக்கு, அந்தப் பொக்கிஷத்தை வெளியில் எடுக்கவும்.
அதனை அப்படியே விட்டு விட்டால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்க தொடங்கும் என்று தமிழகத்தை சேர்ந்த ஷாஹிகுமார் என்ற போலி சாமியார் கூறியுள்ளார். இதற்கு பரிகாரம் இருப்பதாக கூறி முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டில் பூஜை செய்வதற்கான அறையை தேர்ந்தெடுத்துள்ளார். பூஜை செய்யும் போது ஒரு பெண் நிர்வாணமாக தன் முன் அமர்ந்தால் புதையல் வெளிப்படும்.
அந்தப் பெண் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீநிவாஸ் 5 ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இவர்களின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த கிராமத்தினர் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கூலிக்கு அழைத்து வந்த பெண்ணையும் அவரது நான்கு வயது குழந்தையையும் மீட்டனர். இதையடுத்து போலீசார் உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.