Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சவாரிக்கு சென்ற நபர்…. நாடகமாடிய மர்ம கும்பல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக 3 நபர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எல்.என்.புரத்தில் ஆட்டோ டிரைவரான பால நிகேதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடிக்கு பழங்கள் ஏற்றுவதற்காக சவாரி சென்றுள்ளார். அச்சமயம் கீழாநிலைக்கோட்டை அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் பாலநிகேதனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பால நிகேதன் மயக்கமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது போல நாடகமாடி அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இதனை அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி பால நிகேதன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |