காதலுக்கு வயது தடையில்லை என ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர், ”உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ”நம்மைவிட இளையவரை காதலிப்பதில் தவறில்லை. காதலுக்கு வயது தடை இல்லை. மொழியும் தடை இல்லை. அவர் நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக இருக்க வேண்டும்” என பதிலளித்திருக்கிறார்.