Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண தேதியை அறிவித்த சீரியல் ஜோடி… குவியும் வாழ்த்துக்கள்…!!!

சீரியல் ஜோடி ரேஷ்மா- மதன் தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா முரளிதரன். இவரும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மதன் பாண்டியனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

https://www.instagram.com/p/CWNGR0wFlSP/?utm_source=ig_embed&ig_rid=4cf60d0e-84cd-4a86-8246-bd0ee0ab5765

இதன் பின் இருவரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ரேஷ்மா, மதன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த ஜோடிக்கு வருகிற நவம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |