கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் அகற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
தொடர்ந்து சென்னை புறநகர் ரயில்களில் நாளை மறுநாள் முதல் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு பயணிகள் மற்றும் பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லாத ஒன்றை, திரும்பும் பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் போன்ற அனைத்து பயணிகளும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் யூடிஎஸ் செயலியிலும் முன்பதிவில்லாத டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பின்னர் பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின் விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.