துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் சம்பாத்திய நிலை உயரும்.
அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். பொறுமையுடன் எதிலும் ஈடுபடுங்கள்.
கலைத் துறையைச் சார்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். வாக்குவாதங்கள் அவ்வப்போது வரக்கூடும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். நட்பு மத்தியில் நற்பெயர் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் வெற்றி ஏற்படும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்கவேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் பயம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.