மருத்துவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சடையன்வலசை பகுதியில் மகஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். மருத்துவரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தை சேர்ந்த சுகந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுகந்தா தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் மேல் படிப்பிற்காக டெல்லிக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
தற்போது இவர்கள் ராமநாதபுரம் பெரியார் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரன் சுகந்தாவை வேலைக்கு செல்லக்கூடாது எனவும், மேல்படிப்பு படிக்கக்கூடாது எனவும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுகந்தா கடந்த எட்டாம் 8ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுதாவை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுகந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சுகந்தாவின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என சுகந்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.