இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஐம்மு – காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான ராஜோரி செக்டாரில் உள்ள சுந்தர்பானி பகுதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.
மாலை 4.15 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.