தொழிற்சாலைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் பாம்பு புகுந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்து உள்ளனர். அதன்பிறகு தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினர் பாம்பை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.