Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே ஜார்ஜ் அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கு செல்ல போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜார்ஜ் விஷம் குடித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ஜார்ஜை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |