தமிழ் மலையாள மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
பாய் ப்ரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனி ரோஸ். தமிழில் முதல்கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014-ஆம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் கதையான இதில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பத்ரி இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.