ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை இப்படம் பெற்று உள்ளது.
இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யு சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.