செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி வந்த பிறகு டெல்டா பகுதியில் சிறந்த தூர் எடுத்த காரணத்தினால் தான் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது உண்மை. அது போன்று எல்லா பகுதியிலும் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிச்சயமாக அந்த பணி செய்யப்படும். பயிர் காப்பீடு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
2 நாள் முன்னாடி பிரதமர் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோது கூட நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதிகள் இருக்கிறது, இதற்கும் சேர்த்து நீங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று சொன்னோம், நிச்சயமாக வழங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக தான் ஐ. பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த கணக்கெல்லாம் பார்த்து அறிக்கை கொடுக்க சொல்லி இருக்கிறோம்.
கொடுத்ததற்கு பிறகு முறையாக பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல பிரீமியம் தொகை கட்டுவதற்கு விடுமுறை நாள் வந்துருது இடையில… அந்த சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லாமல் அலுவலகத்திலிருந்து திறந்து வேலை செய்யுமாறு உத்தரவு போட்டு இருக்கிறோம் அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது.