சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் நாளை முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் முன்பு போல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பயணிகள் அனைவரும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.