மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள் தோல்வி அடைந்தது என்று மனம் கலங்காதீர்கள். இனிவரும் காலங்கள் உங்களுக்கு வெற்றியே ஏற்படும். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி. இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும்.
வேகம் பிறக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். போட்டிகள் மறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். லாபம் பன்மடங்கு பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் மனைவி குழந்தைகளின் உடல் நிலையில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
சந்தேகம் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். முருகப் பெருமான் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பு வாய்ந்த வழிபாடாக அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்