காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கிராப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தங்கராசுவின் 2-வது மகள் எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கப்பொண்ணுவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் மன உளைச்சலில் இருந்த தங்க பொண்ணு எலி மருந்தை தின்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்து விட்டார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.