Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரத்திற்கு விடுமுறை…. அரசு அதிரடிஅறிவிப்பு….!!!!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒரு வாரத்திற்கு கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |