தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடு கட்ட இனிமேல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்ற உத்தரவை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது.