தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மழை, வெள்ளகாலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனை கருதியும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம் கூட்டம் சேர்வதை அனுமதிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.